தேசிய ஹோமியோபதி மாநாடு

இந்திய மருத்துவத் துறையைச் சேர்ந்த ஆயுஷின் அங்கமான மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தின்

இந்திய மருத்துவத் துறையைச் சேர்ந்த ஆயுஷின் அங்கமான மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தின் 4 -ஆவது தேசிய மாநாடு புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 மாநாட்டை புதுவை அரசின் தொழிலாளர் நலத் துறை செயலர் சுந்தரவடிவேலு தொடக்கி வைத்தார். மருத்துவர் ஹரிசிங் தலைமை வகித்தார். மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பிரகாஷ் ராவ் வரவேற்றார். ஓய்வு பெற்ற முன்னாள் குழந்தையியல் மருத்துவத் துறைத் தலைவர் (ஜிப்மர்) நளினி, புதுவை அரசின் முன்னாள் செயலர் வாசுதேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். 
 புதுவை குடிமைப் பணி அதிகாரி முரளிதரன், புதுவை பல்கலைக்கழக அகநிலை தணிக்கை அதிகாரி கோவிந்தராஜன், புதுவை அரசின் இந்திய மருத்துவ முறை - ஹோமியோபதி துறைத் தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டில் கேரளம், தமிழகம், கர்நாடகம், ஹரியாணா, தில்லி, கொல்கத்தா, ஒடிஸா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர்கள் பலர் பங்கேற்று உரையாற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com