வள்ளலார் தினம்: ஜன. 21-இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

வள்ளலார் தினத்தையொட்டி, வருகிற  21 -ஆம் தேதி புதுவையில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

வள்ளலார் தினத்தையொட்டி, வருகிற  21 -ஆம் தேதி புதுவையில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை துணை ஆணையர் ஜ.தயாளன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி கலால் சட்டம் 1970 விதிகளின்படியும், கடந்த 2018 ஜூன் 4 -ஆம் தேதியிட்ட புதுவை மாநில அரசிதழ் எண் 77- இல் கூறப்பட்ட நிபந்தனை எண் 36 -இன்படியும், புதுவை பகுதியில் உள்ள அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு, வருகிற 
21- ஆம் தேதி (திங்கள்கிழமை)  மூடப்பட வேண்டும். 
அன்றைய தினம் அனைத்து இடங்களிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது புதுவை கலால்  சட்டத்தின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com