பிடிடிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்கு (பிடிடிசி) வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து,

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களுக்கு (பிடிடிசி) வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, ஊழியர்கள் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், சுண்ணாம்பாறு படகு குழாம், புதுச்சேரி, காரைக்கால் சீகல்ஸ் ஹோட்டல், லே கபே, ஊசுட்டேரி படகுகுழாம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இவற்றில் 260 }க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்தாண்டுகளில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது.
 இந்த நிலையில் பதவி உயர்வுகள் முறையாக வழங்கப்படவில்லை எனவும், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறி, பதவி உயர்வுகளை ரத்து செய்து பிடிடிசி மேலாண் இயக்குநர் முருகேசன் கடந்த 25-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால் ஊழியர்களின் சம்பளமும் வெகுவாகக் குறைந்தது.
 இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் பலர் கடற்கரை சாலையில் உள்ள பிடிடிசி தலைமை அலுவலகம் முன் திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்). இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாரும், பிடிடிசி அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பதவி உயர்வு ரத்தால் சம்பளக் குறைப்பை வரும் மாதத்திற்கு அமல்படுத்தக் கூடாது. வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர்.
 இதனை பிடிடிசி அலுவலர்கள் ஏற்றுக் கொண்டதால் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com