சுடச்சுட

  

  ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 02nd July 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pondy1

  தமிழர்களைத் தரக்குறைவாக விமர்சித்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
   இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
   ஆளுநர் கிரண் பேடி தனது சுட்டுரையில் தமிழக மக்களை குறை கூறியும், கொச்சைப்படுத்தியும் கருத்து தெரிவித்திருப்பதை புதுவை மாநில திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ள நிலையில், கிரண் பேடி வேறு மாநில பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட்டு, எல்லை மீறிப் பேசியுள்ளார்.
   மக்களவைத் தேர்தலில் தமிழக, புதுவை மக்கள் பாஜகவுக்கு எதிராக தீர்ப்பளித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிரண் பேடி இப்படி தனது விஷமக் கருத்தைக் கூறியுள்ளார்.
   எனவே, தமிழக மக்களை தரக்குறைவாகப் பேசிய கிரண் பேடியைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசு கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று ஆளுநர் மாளிகை எதிரே திமுக சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai