சுடச்சுட

  

  நிலுவை ஊதியம் வழங்காததைக் கண்டித்து, பாப்ஸ்கோ அதிகாரிகள் அலுவலகத்தைப் பூட்டி ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   புதுவையில் பாசிக் ஊழியர்கள் 55 மாத நிலுவை ஊதியத்தைக் கேட்டு தொடர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, புதுவையில் இயங்கி வரும் மற்றொரு அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் வேளாண் தொடர்புடைய பணியாளர்களுக்கு 24 மாதங்களாகச் ஊதியம் வழங்கப்படாத நிலையில், அதை வழங்கக் கோரி, தொடர்புடைய அதிகாரிகளிடம் ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
   ஜூலை 1 -ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அப்போது அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், சொன்னபடி சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதனால், பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, பாப்ஸ்கோ இயக்குநர் மற்றும் அலுவலக அதிகாரிகளின் அறைகளை திங்கள்கிழமை பூட்டி வேலைநிறுத்தப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
   அப்போது, நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பாப்ஸ்கோவுக்கு சொந்தமான சில பார்களும், காய்கறி, எரிவாயு கடைகளும் மூடப்பட்டதுடன், விநியோகமும் பாதிக்கப்பட்டது.
   மேலும், வங்கி சேவைகளும் முடங்கின. அதேநேரம், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல இயங்கின.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai