புதுவையில் ஜாதி, குடியிருப்புச் சான்றுகளை இணையம் மூலம் வழங்கும் சேவை தொடக்கம்

புதுவையில் ஜாதி, குடியிருப்பு, வருமானச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் வழங்கும் சேவையை வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

புதுவையில் ஜாதி, குடியிருப்பு, வருமானச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் வழங்கும் சேவையை வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
 இதற்கான விழா புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், சேவையைத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
 நிகழ்வில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன், அரசுச் செயலர் அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் டி.அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது: புதுûயியல் இணையதளம் மூலம் சான்றிதழ்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி, பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெற முடியும். இந்தச் சான்றிதழ்களுக்கு வழங்கப்படும் எண்ணைக் கொண்டு, சென்டாக்குக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக வருவாய்த் துறை, பொது இ-சேவை மையங்களை நிர்வகிக்கும் கிராம தொழில் முனைவோர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
 மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மடிக் கணினி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் இணையதளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 இதற்கடுத்த கட்டமாக செல்லிடப்பேசியில் சான்றுகளை வழங்கவும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளோம்.
 இதேபோல, கோப்புகள் குறித்து அறிய "பைல் டிராக்கிங்' முறையை அமல்படுத்த உள்ளோம். இதன் மூலம் ஆளுநர், முதல்வர், அமைச்சர் என யாரிடம் கோப்பு இருந்தாலும் அது குறித்த தகவல் தெரிந்துவிடும் என்றார் அவர்.
 செல்லிடப்பேசி, கணினியில் இலவசமாக தரவிறக்கலாம்...
 பொதுமக்கள் இந்தச் சேவையைப் பெற ட்ற்ற்ல்://ங்க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்.ல்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், பொது இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக சான்றிதழ் ஒன்றுக்கு ரூ. 25, ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய பக்கம் ஒன்றுக்கு ரூ. 2 வசூல் செய்யப்படும்.
 அதேநேரம், பொதுமக்கள் தங்களது கணினி, செல்லிடப்பேசியிலும், மாணவர்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.
 முழுமையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதற்கான குறுஞ்செய்தி விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு வரும். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து, ஒப்புகை அளித்தவுடன், சான்றிதழ்களை பொது இ-சேவை மையங்கள், செல்லிடப்பேசி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புதுப்பிக்கவல்ல ஒருங்கிணைந்த நிரந்தரச் சான்றிதழுக்கு (பிக்) பதிலாக, அவர்கள் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து குடியிருப்பு, வருமானச் சான்றிதழ், நிரந்தர ஜாதி சான்றிதழ்களை தனித் தனியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 இனி, வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் இந்தச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.
 இணையதளம் மூலம் மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com