கவிதைப் பயிற்சி நிறுவனத்தை அரசு தொடங்க வேண்டும்: கோ.பாரதி வலியுறுத்தல்

இளைஞர்களுக்கான கவிதைப் பயிற்சி நிறுவனத்தை அரசு தொடங்க வேண்டும் என பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி வலியுறுத்தினார்.

இளைஞர்களுக்கான கவிதைப் பயிற்சி நிறுவனத்தை அரசு தொடங்க வேண்டும் என பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி வலியுறுத்தினார்.
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கவிமணி தேசிய விநாயகம் பிறந்த நாளை முன்னிட்டு "கவிமணியும் பாவேந்தரும்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை வகித்து பேசியதாவது:
கவிமணி தேசிய விநாயகமும் பாரதிதாசனும் சமுதாயம் சார்ந்த கருத்துகளுடன், குடும்ப வாழ்வியலையும் பாடியுள்ளனர். கவிதை எழுதும் ஆர்வம் பெருகியுள்ள இந்தக் காலத்தில் முறையாகவும், மரபு சார்ந்தும் எழுதும் கவிஞர்களை வளர்த்தெடுத்த, நெறிப்படுத்தவும் மேலும் பயிற்சி தரவும் கவிதைப் பயிற்சி நிறுவனத்தை அரசு தொடங்க வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு மன்னர் மன்னன் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பா.தமிழரசி, கெளசல்யா பிரம்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்வில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்கள் மருதவாணன், நரேந்திரன், பூவரசி ஆகியோரும், இலக்கியப் பணிகளில் சிறந்து விளங்கும் கு. சத்தியமூர்த்தி, கவிஞர்கள் சங்கமம் கட்செவி குழு பொறுப்பாளர் புதுவை குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர்.
தொடர்ந்து, "கூடித் தொழில் செய்க' என்ற தலைப்பில் கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கவிஞர்கள் கவிதை பாடினர்.
முன்னதாக, தேன்மொழி வரவேற்றார். நிகழ்வில் செல்வதுரை நீஸ், மஞ்சமாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com