சுடச்சுட

  

   தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஜாதி ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 -ஆவது புதுச்சேரி பிரதேச ஜாதி ஒழிப்பு மாநாடு வருகிற 19, 20 -ஆம் தேதி புதுவை மாநிலம், வில்லியனூரில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அம்பேத்கர், தந்தை பெரியார், பி.சீனிவாச ராவ் ஆகியோரின் சமூகப் பங்களிப்பை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்லும் வகையில், பேச்சுப் போட்டி நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உழவர்கரை கொம்யூன் குழுத் தலைவர் கி. தெய்வசிகாமணி தலைமை வகித்தார். செயலர் வீர.அரிகிருஷ்ணன் வரவேற்றார். புதுவை பிரதேசக் குழுத் தலைவர் இராச.ஜெயராமன் தொடக்க உரையாற்றினார்.
  போட்டியில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வருகிற 19 -ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படும் எனப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai