ஜூலை 24 -இல் சிறை வார்டர்  பதவிகளுக்கான உடல் தகுதித் தேர்வு

புதுச்சேரி சிறைத் துறையில் ஆண், பெண் வார்டர் பதவிகளுக்கான உடல் தகுதித் தேர்வுகள் வருகிற 24 -ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.

புதுச்சேரி சிறைத் துறையில் ஆண், பெண் வார்டர் பதவிகளுக்கான உடல் தகுதித் தேர்வுகள் வருகிற 24 -ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி சிறைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி சிறைத் துறையின் அறிவிக்கை 16.3.2019-இல் குறிப்பிட்டுள்ளபடி ஆண், பெண் வார்டன் பதவிக்கான ஆள் தேர்வுக்கு உடல் தகுதித் தேர்வுகள் வருகிற 24 -ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வுக்கான கால அட்டவணை உள்ளிட்ட பிற தகவல்களை h‌t‌t‌p‌s://‌r‌e​c‌r‌u‌i‌t‌m‌e‌n‌t.‌p‌y.‌g‌o‌v.‌i‌n  என்ற வலைதளத்தில் காணலாம். விண்ணப்பதாரரின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வுக்கு முந்தைய நாள் நடைபெறும். 
உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 4.8.2019 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதார்கள் தங்களுக்கான அனுமதி சீட்டை மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
தேர்வு தொடர்பான குறுஞ்செய்திகள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு 2233 228 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அலுவலக நாள்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com