மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்கக் கோரி தர்னா

புதுச்சேரியில் மூடப்பட்ட 3 பஞ்சாலைகளைத் திறக்கக் கோரி, அனைத்துத் தொழில்சங்கங்கள் சார்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது.

புதுச்சேரியில் மூடப்பட்ட 3 பஞ்சாலைகளைத் திறக்கக் கோரி, அனைத்துத் தொழில்சங்கங்கள் சார்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது.
புதுச்சேரியில் ஏஎப்டி, சுதேசி, பாரதி உள்ளிட்ட அரசு சார்பு நிறுவன பஞ்சாலைகள் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. இங்கு, பணியாற்றிய தொழிலாளர்கள் வேலையிழந்த நிலையில், அவர்களுக்கான நிலுவை ஊதியமும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், இந்தப் பஞ்சாலைகளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணிக் கொடை உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படவில்லை. இவற்றை வழங்க வலியுறுத்தி, அனைத்துத் தொழில்சங்கங்கள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தியும், நிலுவை ஊதியம், பணிக் கொடை உள்ளிட்டவற்றை வழங்கக் கோரியும் பஞ்சாலைகளின் அனைத்துத் தொழில்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி ஆலை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் தொழில்சங்கத் தலைவர் குப்புசாமி, தொமுச சங்கத் தலைவர் விஜயகுமார், அண்ணா தொழில்சங்கத் தலைவர் பெரியசாமி, என்ஆர்டியூசி தலைவர் கண்ணதாசன், ஏஐடியூசி  தலைவர் கல்யாணசுந்தரம், பாட்டாளி தொழில்சங்கத் தலைவர் சேகரன், சிஐடியூ குணசேரகரன், ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் நிர்வாகி சேகரன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். 
தர்னாவில் 3 பஞ்சாலைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com