சுடச்சுட

  


  புதுச்சேரி கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலி சார்பில், உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14)  நான்கு இடங்களில் நடைபெறுகிறது.
  கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில்,  ஜீவ சமாதி அடைந்த காஞ்சி காமகோடி பீடத்தின் 59-ஆவது பீடாதிபதியாக விளங்கிய பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 327-ஆவது ஆராதனை மகோத்ஸவம் வருகிற செப். 13 முதல் 29-ஆம் வரை கோவிந்தபுரம் மடத்தில் நடைபெறுகிறது.
  இந்த உத்ஸவத்தையொட்டி, கோவிந்தபுரம் மடத்து பாகவதர்களால் நகர மற்றும் கிராமங்களில் பல்வேறு இடங்களில் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடைபெற உள்ளது. புதுச்சேரியில், கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி சார்பில், 4 இடங்களில் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
  அதன்படி, ரெயின்போ நகர்,  சுமுக விநாயகர் கோயிலில் காலை 7.15 முதல் 8 மணி வரையிலும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோயிலில் காலை 8.15 முதல் 9 மணி வரையிலும், லாசுப்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோயிலில் காலை 9.15 முதல் 10.15 மணி வரையிலும், எல்லப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் காலை 10.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது.
  இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai