சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 23-இல் தர்னா: கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு

  By DIN  |   Published on : 14th July 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 23-இல் புதுவை சட்டப்பேரவை அருகே தர்னாவில் ஈடுபட ஏ.ஐ.டி.யு.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
  புதுவை கட்டடக் கலை தொழிலாளர் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் இரா.விசுவநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் வி.எஸ்.அபிஷேகம் கவுன்சில் முடிவுகள் குறித்து விளக்கினார்.
  சங்கத்தின் பொதுச் செயலர் ஜெயச்சந்திரன்,  பொருளாளர் ஞானவேல், துணைத் தலைவர்கள் ராஜகுமாரி, முத்துவேல்,  கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் விசுவநாதன் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் மணல் கிடைக்காததால் கட்டுமான பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டடத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். 
  எனவே,  தமிழகத்தில் இருந்து மணல் கொண்டு வருவதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமையில் வாடும் கட்டடத் தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் வாரிய உறுப்பினர்கள் இல்லாததால், வாரியம் முடங்கிப் போய் உள்ளது. எனவே, வார்டுக்கு உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் அளிக்கப்படும் கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ஆம் தேதி சட்டப்பேரவை வளாகம் எதிரே தர்னாவில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன என்றார் அவர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai