அரசு மருத்துவமனையில் நோயாளி இறந்த  விவகாரம்: நீதி விசாரணைக்கு உத்தரவிட அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டவர் திடீரென இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.


புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டவர் திடீரென இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரியில் சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக  புதன்கிழமை சேர்க்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கில்லியனூரைச் சேர்ந்த பாண்டியன், மருத்துவர்களின் பொறுப்பற்ற செயலால் இறந்துள்ளார். வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவருடன் சென்ற மருத்துவர் யார்? அவரை ஜிப்மரில் சேர்க்காமல், நடு வீதியில் இறக்கிவிட வேண்டிய அவசியம் என்ன? நோயாளி மரணத்தில் அனைத்து நடைமுறைகளும் மீறப்பட்டுள்ளது.
எனவே, புதுவை அரசு நோயாளி பாண்டியன் எந்த நோய்க்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜிப்மருக்கு ஏன் கொண்டு செல்லப்பட்டார்? ஜிப்மரில் சேர்க்கப்பட்டவரா? அல்லது அரசு மருத்துவ மனையில் மரணமடைந்தவரை,  ஜிப்மர் வளாகப் பகுதியில் வீசிவிட்டு வந்தனரா? என்பது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஊழியர்கள்,  அவசர ஊர்தி ஓட்டுநர் உள்ளிட்டோரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இரந்த பாண்டியனின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com