Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த ம.நீ.ம. கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்தது.
    இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் மருத்துவர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் மூலம் தான் அடித்தட்டு மக்கள் அதிகாரத்துக்கு வர முடியும். அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். குறிப்பாக, பெண்கள் அதிகளவு அதிகாரத்துக்கும், அரசியலுக்கும் வர முடியும்.
    மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் என்று மூன்று அடுக்காக இந்தியாவில் அதிகார முறை உள்ளது. ஆனால், புதுவையில் நீண்ட காலமாகவே உள்ளாட்சி அமைப்புகளாகிய மூன்றாவது அடுக்கு இல்லாமலேயே இருந்து வருகிறது.
    இதனாலேயே புதுவை கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாமல் உள்ளன. மேலும், புதுவையின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai