Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்களுக்கு ஆக.3-இல் இலக்கியப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநில கலை, இலக்கியப் பெருமன்றம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி வரும் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் எல்லை.சிவக்குமார், பொதுச் செயலர் பெ.பாலகங்காதரன் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
    புதுவை கலை, இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி, பல்வேறு கலை, இலக்கிய முன்னெடுப்புகளை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலக்கியப் போட்டி வரும் ஆகஸ்ட் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
    கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளை இந்த அமைப்பு நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி கணிப்பொறியில் விளையுமா காய்கறிகள்? என்னும் தலைப்பில் கவிதைப் போட்டியும், நம் கல்வியின் தேவைகளும், தீர்வுகளும்  என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி வேடிக்கை மனிதரல்ல நாங்கள் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளன.
    இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கல்லூரியில் இருந்து தலா 5 பேர் வரை பங்கேற்கலாம். தங்களது கல்லூரிகளில் இருந்து பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பட்டியலை ஜூலை 30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
    போட்டிக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களது கல்லூரி முதல்வர் அல்லது துறைத் தலைவரின் ஒப்புதல் கடிதம், அடையாள அட்டை ஆகியவற்றுடன் வர வேண்டும். 
    ஒவ்வொரு போட்டிக்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.3,000, 2-ஆவது பரிசாக ரூ.2,000, 3-ஆவது பரிசாக ரூ.1,000 வழங்கப்படும்.
    போட்டியில் பங்கேற்க விரும்புவோர், ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் தி.அன்புச்செல்வன் (9994477028), முனைவர் லட்சுமி தத்தை (9944758909) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai