Enable Javscript for better performance
சாலையில் குப்பையை வீசிய கார் உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடைகளுக்கு "சீல்'- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் குப்பையை வீசிய கார் உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடைகளுக்கு "சீல்'

    By DIN  |   Published on : 25th July 2019 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் சாலையில் குப்பையை வீசிய 2 கார் உதிரிப்பாக விற்பனைக் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
    உழவர்கரை நகராட்சி எல்லைக்கு உள்பட்ட இந்திரா காந்தி சிலை அருகே உள்ள நடேசன் நகர் 100 அடி சாலையில் 2 கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன. அந்தக் கடைகளில் பணி செய்பவர்கள், உதிரி பாகங்கள் மீது சுற்றி வரும் நெகிழிப் பைகள், அதன் கழிவுகளை சாலையில் வீசி அசுத்தம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும், இந்தக் கழிவுகளால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், இது தொடர்பாக நகராட்சிக்கு புகார்கள் சென்றன.
    இதையடுத்து, அந்தப் பகுதியை ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள், கடை உரிமையாளர்களிடம் குப்பைத் தொட்டிகளை வைத்து கழிவுகளை அதில் போட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக கார்களை நிறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினர். இவற்றை கடை உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.
    இந்த நிலையில், உழவர்கரை நகராட்சி ஆணையர் எம்.கந்தசாமி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் குறிப்பிட்ட கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்தக் கடைகளின் ஊழியர்கள் குப்பையை தொடர்ந்து சாலையில் போடுவது தெரியவந்தது. மேலும், 2 கடைகளும் நகராட்சி உரிமம் பெறாமல் இதுவரை இயங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த 2 கார் உதிரிப்பாக விற்பனைக் கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் "சீல்' வைத்தனர். மேலும், கடைகளுக்கு தலா ரூ.15,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai