Enable Javscript for better performance
சிறைப் பாதுகாவலர் பணிக்கு உடல் தகுதித் தேர்வு: திரளான இளைஞர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    சிறைப் பாதுகாவலர் பணிக்கு உடல் தகுதித் தேர்வு: திரளான இளைஞர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 25th July 2019 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற சிறைப் பாதுகாவலர் (வார்டர்) பணிக்கான உடல் தகுதித் தேர்வில் திரளான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
    புதுவை காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள 25 சிறைப் பாதுகாவலர்கள் 
    (21 ஆண், 4 பெண்) பணியிடங்களை நிரப்ப சிறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு உப்பளம் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஜூலை 23 முதல் 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    அதன்படி, முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆண் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில், 500 பேர் பங்கேற்ற நிலையில், 2-ஆம் நாளான புதன்கிழமை அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட 4 நிலைகளில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
    தேர்வுக் குழு கண்காணிப்பு தலைமை அதிகாரி சுந்தரேசன், துணை அதிகாரி தில்லைவேல் தலைமையிலான குழுவினர் மேற்கண்ட தேர்வுகளை நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை (ஜூலை 25) மகளிருக்கான சான்றிதழ்கள் சரிபார்த்தலும், உடல் தகுதித் தேர்வும் நடைபெறுகின்றன. 
    இவற்றில் வெற்றி பெறுபவர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். அதன் பிறகு முடிவுகள் வெளியிடப்பட்டு, சிறைப் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai