Enable Javscript for better performance
ஜனநாயக மாதர் சங்கத்தினர் உடல் தானம்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி பிரதேசக் குழு சார்பில், ஜிப்மர் மருத்துவமனைக்கு உடல் தானம் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவப் படையில் பணியாற்றிய சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் லட்சுமிஷேகல் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாதர் சங்க பிரதேசத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், உடல் தான பதிவை தொடக்கிவைத்தார்.
    இதில், உடல் தானம் செய்வதற்கான மருத்துவச் சான்றிதழில் கையொப்பமிட்ட பெண்கள் பலர் அதற்கான விண்ணப்பத்தை ஜிப்மர் மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான குழுவிடம் வழங்கினர். பிரதேசச் செயலர் சத்தியா, பொருளாளர் இளவரசி உள்பட திரளான பெண்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai