Enable Javscript for better performance
ஜிப்மர் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி: துரித உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மர் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி: துரித உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இணையதளம் வழியாக உணவு வாங்கி சாப்பிட்ட புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மாணவர்கள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, கோரிமேட்டில் உள்ள தனியார் துரித உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் சிலர் கடந்த 21-ஆம் தேதி கோரிமேடு காமராஜர் சாலையில் உள்ள துரித உணவகத்திலிருந்து இணையதள சேவை நிறுவனம் வழியாக சிக்கன் ஷவர்மாவை வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். இந்த உணவை சாப்பிட்ட 10 மருத்துவ மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    தொடர்ந்து, தாங்கள் சாப்பிட்ட உணவு மீது சந்தேகமடைந்த அவர்கள், புதுச்சேரி உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் கோரிமேடு காவல் நிலையத்தில் முறையிட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தை காவல் துறை மூடிய நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம் கேட்டு அந்த உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
    இந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி தன்ராஜ் தலைமையிலான குழுவினர் கோரிமேடு போலீஸாரின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு புதன்கிழமை நேரில் சென்றனர். அங்கு சமையல் அறையில் இருந்த சிக்கன் ஷவர்மா தயாரிக்க பயன்படுத்திய மளிகைப் பொருள்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, சிக்கன் உள்ளிட்ட உணவுகள் அங்கு இல்லாததால் அவற்றை ஆய்வு செய்யவில்லை.
    இதுதொடர்பாக, உணவக உரிமையாளரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர் அளிக்கும் விளக்கம் மற்றும் ஆய்வு முடிவில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai