Enable Javscript for better performance
நண்டு குழம்பு சாப்பிட்ட பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    புதுவை மாநிலம், காலாப்பட்டு அருகே நண்டு குழம்பு சாப்பிட்ட பெண் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    காலாப்பட்டு அருகே சின்ன காலாப்பட்டு முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மீனவர் மணிகண்டன் மனைவி முத்துலட்சுமி (29). கர்ப்பமான இவர், கருவின் வளர்ச்சி சரியில்லாததால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கருக் கலைப்பு மருந்துகளை உட்கொண்டதாகத் தெரிகிறது. 
    மேலும், தொடர்ந்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று அங்கு மருத்துவர்கள் வழங்கிய மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார்.
    இந்த நிலையில், முத்துலட்சுமி செவ்வாய்க்கிழமை வீட்டில் நண்டு குழம்பு சாப்பிட்டாராம். பின்னர், மருத்துவர்கள் ஏற்கெனவே அளித்த மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார். இதையடுத்து, சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 
    மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு, கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
    இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, நண்டு குழம்பு சாப்பிட்டுவிட்டு, மாத்திரைகளை உட்கொண்டதால் முத்துலட்சுமி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai