Enable Javscript for better performance
பிஆர்டிசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆர்டிசி) ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி பிஆர்டிசி தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பத்மநாபன், வேலையன், சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தின்போது, புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆர்டிசி) பணியாற்றும் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் மாதந்தோறும் ஒரே நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். 
    7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பிஆர்டிசி நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில், நிரந்தர மேலாண் இயக்குநர், பொது மேலாளர் பதவிகளை நிரப்ப வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., எல்.ஐ.சி., கூட்டுறவு சங்க  தொகைகளை உடனடியாக செலுத்த வேண்டும். 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், திரளான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai