Enable Javscript for better performance
புதுச்சேரியில் ஜூலை 27-இல் மாநில டேக்வாண்டோ போட்டி- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டுக் கழக அதாக் கமிட்டி சார்பில், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி புதுச்சேரியில் வரும் 27, 28-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
    இதுகுறித்து புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டுக் கழகத்தின் மூத்த நிர்வாகி பி.சிட்டிபாபு, புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சர்வதேச டேக்வாண்டோ சம்மேளனத்தில் இணைப்பு பெற்றுள்ள இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் அனுமதியுடன் எங்களது கழகத்தின் சார்பில், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் புதுச்சேரியில் வரும் 27, 28-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
    புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியை முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொடக்கிவைக்கிறார். குழந்தைகள், சப் - ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம். முன்னதாக, போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 25) மாலைக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, வேல்ராம்பட்டு, கார்கில் நகரில் உள்ள எங்களது அலுவலகம் அல்லது 98947 57732 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai