Enable Javscript for better performance
புதுச்சேரி- கடலூர் ரயில் பாதைத் திட்டத்தை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி- கடலூர் ரயில் பாதைத் திட்டத்தை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி - கடலூர் ரயில் பாதைத் திட்டத்தை தொடங்கக் கோரி, அகில இந்திய தொழில் சங்க கவுன்சில் (ஏஐசிசிடியு), இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில், புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சோ.மோதிலால் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் சோ.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலர் எஸ்.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ஆர்ப்பாட்டத்தின்போது, ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. சலுகை கட்டணங்களை ரத்து செய்யக் கூடாது. அனைத்து வழித்தடங்களிலும் ஏழைப் பயணிகள் பயன்பெறும் வகையில், கூடுதல் ரயில்களை அதிகப்படியான பெட்டிகளுடன் இயக்கிட வேண்டும்.
    அறிவித்தபடி, புதுச்சேரி - கடலூர் ரயில்பாதைத் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும். கிழக்குக் கடற்கரை ரயில் பாதைத் திட்டத்தை புதுச்சேரி ரயில் 
    நிலையத்துடன் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
    இதில், திரளான ஏஐசிசிடியு நிர்வாகிகள், ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai