Enable Javscript for better performance
மருத்துவப் படிப்பில் இ.டபிள்யு.எஸ். பிரிவு காலி இடங்களை பொது ஒதுக்கீட்டில் சேர்க்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவப் படிப்பில் இ.டபிள்யு.எஸ். பிரிவு காலி இடங்களை பொது ஒதுக்கீட்டில் சேர்க்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 07:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநில மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட ஜாதியினருக்கான (இ.டபிள்யு.எஸ்.) இடங்களில் காலியாக உள்ள 6 இடங்களை பொது ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.
    இதுகுறித்து சென்டாக் நிர்வாகத்துக்கு அந்தச் சங்கத்தின் தலைவர் வை.பாலா அனுப்பியுள்ள மனு விவரம்:
    புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 180 இடங்களில் 131 இடங்கள் புதுவை மாநிலத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், 10 சதவீதம் அதாவது 13 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட ஜாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
    இந்த நிலையில், சென்டாக் நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட ஜாதியினருக்கான ஒதுக்கீட்டில் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 10 இடங்களும், காரைக்கால் பிராந்தியத்துக்கு 2 இடங்களும், மாஹே பிராந்தியத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனாம் பகுதிக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.
    இதில், சென்டாக் தரவரிசைப்படி, தற்போது புதுச்சேரி பிராந்தியத்துக்கு 4 மாணவர்களும், காரைக்கால் பிராந்தியத்துக்கு ஒரு மாணவரும் விண்ணப்பித்துள்ளனர். மாஹே பகுதியில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. ஏனாம் பகுதியில் 4 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
    புதுச்சேரி பிராந்தியத்துக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்களில் 4 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், மீதமுள்ள 6 இடங்களை புதுச்சேரி பகுதி மாணவர்களின் பொது ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுடன் சேர்க்க வேண்டும். காரைக்காலில் நிரப்பப்படாத ஒரு இடத்தை காரைக்கால் மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai