புதுவையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேர்வான மாணவர்கள் பட்டியல் வெளியீடு

புதுவையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளில்  அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்குத்

புதுவையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளில்  அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்குத் தேர்வான மாணவர்களின் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 291 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் 287 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 285 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீடு, கிறிஸ்தவ சிறுபான்மையினர், தெலுங்கு சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளில் 166 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 119 இடங்கள் காலியாக உள்ளன.
மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 129 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் 113 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 16 இடங்கள் காலியாக உள்ளன. 
இதேபோல, மாஹே ராஜீவ் காந்தி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் உள்ள 35 பி.ஏ.எம்.எஸ். இடங்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.வி.எஸ்.சி. பாடப் பிரிவுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பாடப் பிரிவுகளுக்கு தேர்வாகியுள்ள 30 எஸ்.சி. மாணவர்களின் ஜாதி சான்றிதழை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் மறு ஆய்வு செய்து வருகின்றனர்.
மாணவர்கள் தங்களுக்கான சேர்க்கை ஆணையை சென்டாக் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூலை 29) காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 2 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடம் கிடைக்கப் பெற்ற அந்தந்தக் கல்லூரிகளில் சான்றிதழ்களை சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com