Enable Javscript for better performance
ஆதார் அட்டை இல்லாத வியாபாரிகள்  பழங்கள் விற்பனை செய்யத் தடை: நகராட்சிக்கு உணவுப் பாதுகாப்புத் துறை ப- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் அட்டை இல்லாத வியாபாரிகள்  பழங்கள் விற்பனை செய்யத் தடை: நகராட்சிக்கு உணவுப் பாதுகாப்புத் துறை பரிந்துரை

    By DIN  |   Published on : 01st June 2019 09:59 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரியில் ஆதார் அட்டை இல்லாத வியாபாரிகள் சந்தைகளில் பழங்களை விற்க தடை விதிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்தது.
    ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படும் மாம்பழம்,  வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்வதை புதுவை உணவுப் பாதுகாப்புத் துறை தடை செய்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து, தவறுகளை கண்டுபிடிக்கும்போது வியாபாரிகளின் பெயர், முகவரி விவரத்தை வாங்குகின்றனர். பின்னர், மேல் நடவடிக்கைக்காக தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது, வியாபாரிகள் கொடுத்த முகவரிகள் போலி என்பது தெரியவந்தது. 
    இந்த நிலையில், புதுவை உணவு பாதுகாப்புத் துறையில் தணிக்கை மேற்கொண்ட மத்திய தணிக்கை துறை அதிகாரிகள், இந்த நடவடிக்கை விவரத்தைக் கண்டு, கடந்த காலங்களில் ஆய்வு செய்தது உண்மையா என்று புதுவை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். 
    இதனால், புதுவை அதிகாரிகள் அவர்களை நேரிடையாக களத்துக்குச் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
    அதன்படி, புதுச்சேரி  பெரிய மார்க்கெட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன், மத்திய தணிக்கைத் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். 
     அப்போது ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்த 12 வியாபாரிகளிடம் இருந்து சோதனை செய்வதற்காக பழங்களை அதிகாரிகள் எடுத்து கொண்டனர். அதுபோல், உறுதியாக ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த ஒரு பெட்டி மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
    இந்த ஆய்வு குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் கூறியதாவது:
    கடந்த காலங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பழுக்க வைக்க ரசாயனம் கலக்கப்பட்டு இருப்பது உறுதியானவுடன் மேல்நடவடிக்கைக்காக ஆய்வின்போது பெற்ற பெயர் மற்றும் முகவரிகளின் அடிப்படையில் வியாபாரிகளை தொடர்பு கொள்ளும் பொருட்டு கடிதங்களை அனுப்பினோம்.  ஆனால், அனைத்து கடிதங்களும் அவர்களை சென்றடையாமல் திரும்பி வந்தன.
    பின்னர், விசாரித்தபோது அவர்கள் கொடுத்திருந்தது போலி முகவரி என்பது தெரியவந்தது. 
    இதனால் நகராட்சி ஆணையரிடம் பெரிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்கும்போது ஆதார் அட்டை பெற்றுக்கொண்டு, அவர்களது முகவரியை உறுதிப்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். ஆதார் அட்டை இல்லாத வியாபாரிளுக்கு தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆய்வில் மத்திய தணிக்கை துறை அதிகாரிகளும் வந்திருந்தனர் என்றார்
    இந்த நடவடிக்கையின்போது உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி பாலகிருஷ்ணன்  உடனிருந்தார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp