அறிவியல் செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஜூன் 29 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் ம. குப்புசாமி தெரிவித்துள்ளார். 


அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஜூன் 29 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் ம. குப்புசாமி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2020 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையாக அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வெழுத இருப்பவர்கள்) ஏற்கெனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று, செய்முறை பயிற்சி வகுப்புக்கு பெயரை பதிவு செய்யாத தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, அனைத்து தனித் தேர்வர்களும் அதற்கான விண்ணப்பங்களை
 இணையதளத்தில் ஜூன் 29- ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை 2 நகல்களில் நிறைவு செய்து, தேர்வுக் கட்டணம் ரூ. 125 உடன் கீழ்கண்ட மையங்களில்  நேரில் ஒப்படைக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள், புதுச்சேரி தமிழ்த் தென்றல் திரு.வி.க. அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பெண் விண்ணப்பதாரர்கள், புதுச்சேரி வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் ஒப்படைக்க வேண்டும்.
செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட தேர்வர்கள் மட்டுமே மார்ச் 2020 -இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். செய்முறை வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com