சர்வதேச சுற்றுச் சூழல் தினம் கடைப்பிடிப்பு

புதுச்சேரியில் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடப்பட்டன.


புதுச்சேரியில் சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்திய இளைஞர் விடுதிகள் சங்க புதுவை மாநிலக் கிளையின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு, புதுச்சேரி அறிவியல் இயக்கம் ஆகியவை  சார்பில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, வீராம்பட்டினம் கோயில் மைதானம்,  ஊர்ப் பகுதிகள் மற்றும் வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் மண் சார்ந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு கிளையின் துணைத் தலைவர்கள் சரவணன், கஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இயற்கை ஆர்வலர்  பூரணாங்குப்பம் ஆனந்தன்,  புதுச்சேரி அறிவியல் இயக்ககச் செயலர் அருண் நாகலிங்கம், கடல் பொறியாளர் ஜெயபால்,  எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் மையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாநிலக் கிளை பொருளாளர்  ராசா மோகன், செயலர் சண்முகவேலு, உழவர்கரை கிளை அவைத் தலைவர் ஸ்ரீதரன், செயற்குழு உறுப்பினர் கமலசேகரன், காலாப்பட்டு கிளை அவைத் தலைவர் செந்தில்குமார், மகளிர் கிளை ஒருங்கிணைப்பாளர் அனு முத்துக்குமார்,  அகவொலி கார்த்திகேயன், சங்க உறுப்பினர்கள், அறிவியல் இயக்கக உறுப்பினர்கள் சந்திரசேகரன்,  அரவிந்த், செந்தில் முருகன், லிங்கேஸ்வரன் மற்றும் குழந்தைகள், இளைஞர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 
மரக்கன்றுகளுக்கான பாதுகாப்புக் கூடுகள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை வளர்க்க பொறுப்பேற்றக் கொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் காற்று மாசுபடுவதைக் குறைக்க முயற்சி மேற்கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு உறுப்பினர் சண்முகம் செய்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com