மருத்துவப் படிப்புக்கு ஜூன் 16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் சேர வருகிற 16- ஆம் தேதி வரை "நீட்' மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.


புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் சேர வருகிற 16- ஆம் தேதி வரை "நீட்' மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் பி.டி.ருத்ர கவுடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு "நீட்' மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. வருகிற 16- ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், பி.ஏ.எம்,எஸ். படிப்புகள் "நீட்' மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். அதே நேரம், பி.வி.எஸ்சி. படிப்பில் புதுவை மாநில ஒதுக்கீடு மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 106 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும், 22 என்.ஆர்.ஐ. இடங்களும் உள்ளன. மாஹே ராஜீவ் காந்தி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ். படிப்புக்கு 42 அரசு ஒதுக்கீடு இடங்களும், 7 என்.ஆர்.ஐ. இடங்களும் உள்ளன. 
இதேபோல, மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்புக்கு 29 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 5 என்.ஆர்.ஐ. இடங்களும் உள்ளன. ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12 தேசிய ஒதுக்கீட்டு இடங்களும், 4 என்.ஆர்.ஐ. இடங்களும் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகள்: தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்த வரை பிம்ஸ் கல்லூரியில் 54 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 46 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும், 50 சிறுபான்மையின இடங்களும் உள்ளன. மணக்குள விநாயகர் கல்லூரியில் 55 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 95 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும், வெங்கடேஸ்வரா கல்லூரியில் 55 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 20 நிர்வாக 
ஒதுக்கீட்டு இடங்களும், 75 சிறுபான்மையின இடங்களும் உள்ளன.
பி.டி.எஸ். படிப்பில் மாஹே தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 50 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 50 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும், வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் 50 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 50 சிறுபான்மையின இடங்களும் உள்ளன.
மாணவர்கள் சென்டாக் இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், முன்பு செலுத்திய கட்டணத்திலிருந்து கூடுதல் தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.
மருத்துவ இடங்கள் குறித்த விவரங்கள் உள்பட அனைத்துத் தகவல்களும் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com