ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுவையில் இன்று நடைபெறவிருந்த மனிதச் சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுவையில் புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறவிருந்த மனிதச் சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுவையில் புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறவிருந்த மனிதச் சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைமையில், கூட்டணி கட்சிக் கூட்டம் புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கடந்த
 9-ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதல்வர் நாராயணசாமி, திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
 இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, தமிழகத்தில் புதன்கிழமை (ஜூன் 12) மாலை விவசாய அமைப்புகள் மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளன. அதற்கு, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 எனவே, புதுவையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியளித்துள்ள மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மரணமடைந்தார். இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவையட்டி, புதன்கிழமை (ஜூன் 12) நடைபெறவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டம் அடுத்த தேதி அறிவிக்கும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com