புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சைக்கிள் பிரசாரம்

இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து புதுச்சேரியில் புதன்கிழமை சைக்கிள் பிரசாரம் நடைபெற்றது.


இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து புதுச்சேரியில் புதன்கிழமை சைக்கிள் பிரசாரம் நடைபெற்றது.
இதையொட்டி, புதுச்சேரி மிஷன் வீதி கல்வே கல்லூரி அருகில் இருந்து சங்கத்தினரும், மாணவர்களும் சைக்கிள் பிரசார பயணத்தைத் தொடங்கினர். இதனை மாணவர் சங்க தமிழ் மாநிலத் தலைவர் கண்ணன், வாலிபர் சங்க தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர்.
பிரசாரத்துக்கு இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ், ஜனநாயக வாலிபர் 
சங்கத் தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், இந்தி திணிப்பு, குலக்கல்வி முறையை கொண்டுவர முயலும் புதிய கல்விக் 
கொள்கையை எதிர்ப்பது, அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது, நீட் தேர்விலிருந்து தமிழகம், புதுவைக்கு விலக்களிப்பது, தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பல்கலைக்
கழகத்தின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும், 
புதுவையில் பாரம்பரியமிக்க கல்வே கல்லூரி, வ.உ.சி. பள்ளிக்கு அதிக நிதி ஒதுக்கி, புனரமைக்க வேண்டும், ஆதிதிராவிட மாணவர்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளிகளை தொடங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் செயலர் பெருமாள், மாணவர் சங்கச் செயலர் விண்ணரசன், வாலிபர் சங்கச் செயலர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
புதுச்சேரி கல்வே கல்லூரி அருகே தொடங்கிய இந்த 
சைக்கிள் பிரசார பயணம், கலிதீர்த்தாள்குப்பத்தில் நிறைவடைந்தது. வியாழக்கிழமை (ஜூன் 13) மதகடிப்பட்டில் தொடங்கி பாகூர் வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com