முத்தியால்பேட்டை தொகுதியில் நிலுவை வளர்ச்சிப் பணிகளை முடிக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

 புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் நிலுவையில் இருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.

 புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் நிலுவையில் இருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.
புதுவை மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மாநிலம் முழுக்க பல்வேறு பணிகளுக்கு அரசு சார்பில் அவசர, அவசரமாக பூமிபூஜைகள் செய்யப்பட்டன. ஆனால், அந்தப் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு மேற்கேள்ள முத்தியால்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வையாபுரிமணிகண்டன் எம்எல்ஏ  தலைமையில், நகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், நகராட்சி உதவிப் பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் கோகுலகிருஷ்ணன், ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், 2018-ஆம் நிதியாண்டில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன, நிறைவுபெற்றுள்ள பணிகள் எவை, முடிக்கப்படாமல் உள்ள பணிகள் எவை என்பன குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், 2019-ஆம் ஆண்டு  சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செய்யப்பட வேண்டிய பணிகள் எவை என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பூமிபூஜை போடப்பட்ட ரூ. ஒரு கோடியிலான பணிகளை ஒப்பந்ததாரர்கள் தொடங்காமல் இருப்பது குறித்து எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அதிகாரிகள், போதிய நிதி இல்லாத காரணத்தால் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பூமிபூஜை செய்த  பணிகள் அனைத்தும் தொகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைக்காக தொடங்கப்பட்டது. எனவே, அந்தப் பணிகள் அனைத்தையும் உடனடியாக தொடங்க வேண்டும். பணி ஆணையில் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்தப் பணிகளை 
ஒப்பந்ததாரர்கள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்எல்ஏ 
வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com