ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடு: ஆளுநர் பாராட்டு

புதுச்சேரி, ஜூன் 13: புதுச்சேரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி,  ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடு குறித்து பாராட்டுத் தெரிவித்தார்.

புதுவையில் ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆளும் கட்சியின்  எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து அவர் கள ஆய்வில் ஈடுபட்டார். கடந்த 6 மாதங்களாக வார நாள்களிலும் கூட அரசு அலுவலகங்களில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார். இதற்கும் ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
இதனிடையே, மக்களவைத் தேர்தல் வந்ததால் ஆளுநர் கிரண் பேடி தனது கள ஆய்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். தேர்தல் முடிவடைந்த நிலையில், மீண்டும் கள ஆய்வு, ஆய்வுப் பணியை ஆளுநர் கிரண் பேடி தொடங்கினார்.
கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனகன் ஏரியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், வியாழக்கிழமை கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிரண் பேடி ஆய்வு செய்தார். அங்கு, நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு சிறப்பான சேவை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் கிரண் பேடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாட்டுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com