பாலிடெக்னிக் சேர்க்கை:  தரவரிசைப் பட்டியல் வெளியீடு

புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்


புதுச்சேரி, ஜூன் 13: புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வியாக்கிழமை வெளியிடப்பட்டது.
புதுவை மாநிலத்தில் லாசுப்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லாசுப்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் 
கல்லூரி, வரிச்சிக்குடி காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால் மேடு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஏனாம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மாஹே இந்திரா காந்தி பாலிடெக்னிக் 
கல்லூரி ஆகிய 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டு மாணவர்கள் 
சேர்க்கைக்கான 2,326 இடங்கள் குறித்து கடந்த மே 2 -ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் மே 15- ஆம் தேதி வரை சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில், வழக்கமான இடங்களுக்கான முதல் கட்ட மாணவர் 
சேர்க்கைக்கு தகுதியான மாணவர்களின் வரைவு தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
இதேபோல, இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கைக்கான இறுதி தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள சிவில், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டல், மாடர்ன் ஆபிஸ் பிராக்டிஸ் உள்ளிட்ட ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலான இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்டாக் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ். சிவராஜ் கூறியதாவது: தற்போது சென்டாக் இணையதளத்தில் பாலிடெக்னிக் நேரடிச் சேர்க்கைக்கான 419 (272 புதுவை மாணவர்கள், 147 வெளி
மாநில மாணவர்கள்) இடங்களுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல,  வழக்கமான 1,087 (790 புதுவை மாணவர்கள், 297 வெளிமாநில மாணவர்கள்) இடங்களுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை வழக்கமான இடங்களுக்கான இறுதி தரவரிசைப் பட்டியலும், நேரடிச் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலும் வெளியிடப்படும். மீதமுள்ள இடங்களுக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com