மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை வழங்க திமுக கோரிக்கை

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குவோர்களுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குவோர்களுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து புதுவை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 புதுவையில் கடந்த 20 ஆண்டுகாலமாக நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதற்கு முழு முதல் காரணம் நமது வீட்டைத் தேடி வரும் மழைநீரை சேமித்து வைக்காமல், முழுமையாக அப்படியே கழிவுநீரில் விட்டு வருவதுதான்.
 பின்னர், நீர் கிடைக்காத சமயத்தில் அழுது புலம்புகிறோம். புதுவையில் மழைநீரை சேமிக்கவும், ஏரி, குளங்களில் சேமிக்கப்படும் நீரை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. உதாரணமாக, கதிர்காமத்தில் உள்ள கனகன் ஏரியில் தொழில்சாலைகளின் கழிவுநீர், வீடுகளின் கழிவுநீர் செல்லும் வகையில், முந்தைய அரசு வழி செய்துள்ளதே தற்போதும் தொடர்கிறது.
 இதனால், நீர் இருக்கும் ஒரே ஏரியாக அந்த ஏரி இருந்தாலும், அதிலுள்ள நீரை எடுத்துப் பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலை நீடித்தால், தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை எதிர்காலத்தில் புதுவையிலும் ஏற்படும்.
 எனவே, புதுவை அரசு நிகழாண்டாவது புதுவையில் பெய்யும் மழை நீரில் 90 சதவீத நீரை பூமிக்கடியில் செல்ல வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசின் முயற்சியால் மட்டுமே மேற்கொள்ள முடியாது என்பதால், இந்த விஷயத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 அதாவது, அனைத்து வீடுகளிலும் மழைக்காலம் தொடங்குவதற்குள்ளாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்துபவர்களுக்கு ஏதேனும் சலுகையை அரசு வழங்க முன்வர வேண்டும். அவர்களுக்கு குப்பை வரியை ரத்து செய்யலாம், மின்சாரம் அல்லது குடிநீர் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையும் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார் முகமது யூனிஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com