ஜூலை 1 முதல் இணையதளம் மூலம் சாதி, குடியிருப்பு சான்றுகள் பெறலாம்
By DIN | Published On : 23rd June 2019 12:51 AM | Last Updated : 23rd June 2019 12:51 AM | அ+அ அ- |

புதுவையில் இணையதளம் மூலம் சாதி, குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கும் திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து புதுவை அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்பு செயலரும், மாவட்ட ஆட்சியருமான அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முக்கிய சேவைகளை இணைய வழியாக வழங்கிட திட்டமிட்டு
வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும் குடியிருப்பு, குடியுரிமை, சாதி, வருமான சான்றிதழ்கள் மின் மாவட்டம் திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்தச் சேவையை ட்ற்ற்ல்ள்:// ங்க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்.ல்ஹ்.ஞ்ர்ஸ். ண்ய் என்ற இணையதளம் வாயிலாகப் பெறலாம். சான்றிதழ்களை பொதுமக்கள் எளிதாகப் பெறும் நோக்கத்தில், நேர விரயமின்றி இணையதளம் மூலமாக சான்றிதழ்களைப் பெறுவதற்கும், போலி சான்றிதழ்களைத் தடுப்பதற்கும் இந்த புதிய நடைமுறை உதவும்.
இணையதளம் மூலமாக சான்றிதழ் வழங்குவது குறித்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நேரடி கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்வித் துறை, தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை பங்களிப்பில் இந்தத் திட்டத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
இந்தச் சேவையைப் பயன்படுத்தி இணைய வழியாக விண்ணப்பித்து குடியிருப்பு, குடியுரிமை, சாதி, வருமான சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.