சுடச்சுட

  

  ஜிப்மர் நிறுவனத்துடன் உலக சுகாதார அமைப்பு அலுவலகம், இந்திய பொது சுகாதார சங்கம் இணைந்து நடத்திய நோய்களைத் தடுக்கும் தடுப்பூசி குறித்த தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
   கருத்தரங்கை முதுநிலை பேராசிரியர் கெளதம் ராய், நோய்த் தடுப்பு மற்றும் சமூக நலத் துறையின் தலைவர் சோனாலி சர்கார் ஆகியோர் பொது சுகாதாரத்தின் கண்காணிப்பு மற்றும் மருத்துவத் துறையில் தீவிர சிகிச்சைகள் குறித்து வலியுறுத்திப் பேசி தொடக்கிவைத்தனர்.
   இதில், தடுப்பூசி மற்றும் தடுக்கக்கூடிய தொற்று நோய்களில் பாதுகாப்பு, வலுவான கண்காணிப்பு, முறையான தடுப்பூசி கண்காணிப்பு முறை மூலம் மிக உயர்ந்த அளவிலான நோய்க் கட்டுப்பாட்டை அடைவதற்கான திறன் மேம்பாட்டு முறைகள் வலியுறுத்தப்பட்டன.
   தடுப்பூசி மற்றும் தடுக்கக்கூடிய நோய்களின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், டிப்த்தீரியா, தட்டம்மை, ருபெல்லா, போலியோ போன்ற நோய்களை ஒழிக்கும் செயல்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
   கருத்தரங்கில், உலக சுகாதாரத் துறை மருத்துவ அதிகாரி சாயிரா பானு, சமூக மருத்துவத் துறை நிபுணர்கள், ஜிப்மர் பொது சுகாதாரத் துறையினர், முதுநிலை பட்ட மேற்படிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எம்பிஎச் மாணவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   இதில், முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற ஜிப்மர் மருத்துவ இயக்குநர் ராகேஷ் அகர்வால், நோய்க் கண்காணிப்பின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஜிப்மர் கல்வி முதல்வர் ஆர்.பி.சுவாமிநாதன், கருத்தரங்கின் நோக்கம் குறித்தும், ஹெபடைடிஸ் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார். நோய்த் தடுப்பு மற்ற சமூகத் துறை தொடர் மருத்துவக் கல்வியின் அமைப்புச் செயலர் ஜெ. வெங்கடாசலம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai