மத்திய ஆட்சியை விமர்சித்து நோட்டீஸ்: முதல்வர் விநியோகம்
By DIN | Published On : 04th March 2019 08:50 AM | Last Updated : 04th March 2019 08:50 AM | அ+அ அ- |

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட குறும்படம் குறித்த நோட்டீஸை புதுச்சேரியில் முதல்வர் வே.நாராயணசாமி சனிக்கிழமை விநியோகம் செய்தார்.
மத்திய பாஜக அரசின் பல்வேறு திட்டங்களால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை விளக்கும் வகையில், குறும்படங்களுடன் கூடிய நோட்டீûஸ இளைஞர் காங்கிரஸார் அச்சடித்துள்ளனர். இதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி உப்பளம் தொகுதி வம்பாகீரபாளையத்தில் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்கு இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலர் ஜெயராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் இளையராஜா, புதுவை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் லிஜூன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் லட்சுமிகாந்தன், வேல்முருகன், காளிமுத்து, மாநிலச் செயலர்கள் ரகுபதி, ஜெயதீபன், ஆனந்தபாபு, ரவிச்சந்திரன், புதுவை மாநில மீனவர் காங்கிரஸ் துணைத் தலைவர் மாரியப்பன், உப்பளம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உப்பளம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நீசார், பொதுச் செயலர்கள் அலெக்சாண்டர், முருகன், சச்சின், ஆல்வின் ஆகியோர் செய்திருந்தனர்.