ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி

புதுவை அரசு மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு சீர்வரிசை பேரணி  புதன்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசு மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு சீர்வரிசை பேரணி  புதன்கிழமை நடைபெற்றது.
 நெல்லித்தோப்பு அருந்ததிபுரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியை குழந்தைகள் நலத் திட்ட அதிகாரி ராயல் விஜயா  தொடக்கி வைத்தார். 
தொடர்ந்து, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்தும்,  ஊட்டச்சத்தில் தாய்மார்களின் பங்களிப்பு பற்றியும் எடுத்துரைத்தார். பேரணியில் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அருந்ததிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணி அப்பகுதி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி சமுதாய நலத்துறைத் தலைவர் பாமா லட்சுமி ஊட்டச்சத்து குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக, நிகழ்ச்சிக்கு குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலிய அதிகாரி கீதா தலைமை வகித்தார். சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். அங்கன்வாடி ஊழியர் விஜயலட்சுமி வரவேற்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com