சுடச்சுட

  

  உரிய நேரத்தில் என்.ஆர்.காங். வேட்பாளர்கள் அறிவிப்பு: என்.ரங்கசாமி தகவல்

  By DIN  |   Published on : 16th March 2019 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என்று புதுவை சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்தார்.
  புதுவை மக்களவைத் தொகுதி தேர்தல், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் களமிறங்குகிறது. இதையடுத்து,  புதுச்சேரியில் உள்ள அதிமுக,  பாமக , பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகளை என்.ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். 
  ஏற்கெனவே அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். பின்னர், பாஜக மாநில அலுவலகத்துக்குச் சென்று மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ.  மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார்.
  புதுச்சேரியில் உள்ள கூட்டணி கட்சியான பாமக மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளை மரியாதை  நிமித்தமாக என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சந்தித்து  ஆதரவு திரட்டினார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி தகுந்த நேரத்தில் மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்போம் என தெரிவித்தார்.
  ஓம்சக்தி சேகருடன் சந்திப்பு: அதைத்தொடர்ந்து, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகரை சந்தித்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai