சுடச்சுட

  

  பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 16th March 2019 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி தாகூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  புதுச்சேரி - விமான நிலைய சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக மாநிலம், பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தி, தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
  இதில் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
  மாதர் தேசிய சம்மேளம்: பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சம்மேளனத்தின் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் எம். அமுதா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் சரளா, ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இதில், பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளை சமூக விரோதிகள் பாலியல் வன்கொடுமை செய்ததை வன்மையாகக் கண்டிப்பது, வன்கொடுமைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும், நீதி விசாரணை நடத்த வேண்டும், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
  ஆர்ப்பாட்டத்தில் துணைச் செயலாளர்கள் ஆனந்தவள்ளி, தசரதா உள்ளிட்ட திரளான பெண்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai