தரம் அறியாமல் பொருள்களை வாங்க வேண்டாம்: குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரி அறிவுரை

தரம் அறியாமல் பொருள்களை வாங்க வேண்டாம் என புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும்

தரம் அறியாமல் பொருள்களை வாங்க வேண்டாம் என புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநரும், கூடுதல் செயலருமான 
இ. வல்லவன் அறிவுறுத்தினார்.
 புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, மனிதத் தன்மை நுகர்வோர் மையம் இணைந்து நடத்திய உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரெட்டியார்பாளையம் மக்கள் தலைவர் வ. சுப்பையா அரசு 
உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மனிதத் தன்மை நுகர்வோர் மையத்தின் தலைவர் பி. உத்திரேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் தலைமையாசிரியர் (பொ) எஸ். பாலமுருகன், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநரும், கூடுதல் செயலருமான இ. வல்லவன் பேசியதாவது:
 அரசுப் பள்ளிகள் கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் வளர்க்கும் இடமாக விளங்குகின்றன. அதே போல, தற்போது நடைபெறும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்வும் வாழ்க்கைக் கல்வியை வளர்ப்பது போன்றதே. தற்போது தொலைக்காட்சி விளம்பரங்கள் பெரும்பாலானவை குழந்தைகளை வைத்தே எடுக்கப்படுகின்றன. குழந்தைகளை வைத்து எடுத்தால், உடனடியாக அனைத்துத் தரப்பு மக்களையும் விளம்பரம் சென்றடையும் என்ற வியாபார நோக்கமே இதற்குக் காரணம்.
வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பாமல், உண்மையிலேயே அந்தப் பொருள் நமக்கு உபயோகமானதா, விலைக்கு உரிய பொருளா, தரமான பொருளா எனப் பார்த்து வாங்க வேண்டும். உணவுப்பொருள்களில் கலப்படம் என்றால் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கலாம். 
இதனை குழந்தைகளாகிய நீங்கள், பெற்றோருக்கும், உங்களது நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.தொடர்ந்து, நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com