சுடச்சுட

  


  பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் எதிரே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலர் சு. லட்சுமி தலைமை வகித்தார். வி.சி.க. மாநில முதன்மைச் செயலர் தேவ.பொழிலன், அரசியல் குழுத் துணைச் செயலர் நா.முன்னவன், தலைமை நிலையச் செயலர் செல்வ. நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 
  இதில், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை நீதிமன்றத்தின் மேற்பார்வையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பாரபட்சமற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு துணை போகும் காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர். 
  இதில், மகளிர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் மாலா, பாத்திமா பீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai