சுடச்சுட

  


  புதுவை நகரப் பகுதிகளில் வசிப்போர் கடைசி தேதிக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்க வேண்டும் என மின் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக புதுவை நகர மின் துறைச் செயற்பொறியாளர் கோ. கனியமுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மின் துறை நகர இயக்குதல் - பராமரித்தல் கோட்டத்துக்கு உள்பட்ட (நெல்லித்தோப்பு முதல் எல்லைப்பிள்ளைச்சாவடி வரை, முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை) சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடி சேதுராமன் நகர், கடற்கரை சாலை, துப்புராயப்பேட்டை, வம்பாகீரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி, மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai