நுகர்வோர் உரிமைகள் குறித்த சட்டம்: பாடப் புத்தகத்தில் சேர்க்க வலியுறுத்தல்

நுகர்வோர் உரிமைகள் குறித்த சட்டத்தை புதுவையில் பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க

நுகர்வோர் உரிமைகள் குறித்த சட்டத்தை புதுவையில் பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய நுகர்வோர் உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியது.
அந்த அமைப்பின் சார்பில், உலக நுகர்வோர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் புதுச்சேரி செகா கலைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு அமைப்பின் தலைவர்  கோ.சுகுமாரன் தலைமை வகித்தார். இரா.சுகன்யா வரவேற்றார். பொறியாளர் இரா.தேவதாசு,  இரா.சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாகூர் அரசுக் கலை -அறிவியல் கல்லூரி முதல்வர்  நா.இளங்கோ தொடக்கவுரையாற்றினார். உழவர்கரை நகராட்சி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கே.சந்திரா,  ராஜீவ் காந்தி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கே.சங்கரலிங்கம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிதாக கொண்டு வரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று செயல்பாட்டுக்குக் கொண்டு வர புதிதாக அமையவுள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி அமைக்க வேண்டிய  மாவட்ட, மாநில அளவில் நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில்களை புதுவை அரசு அமைக்க வேண்டும். புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் நீதிபதியின் பதவிக் காலம் முடிவடைந்ததால், அந்தப் பதவியில் உடனடியாக நீதிபதியை நியமிக்க வேண்டும்.
  பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டங்களில் நுகர்வோர் உரிமைகள் குறித்த சட்டத்தைச் சேர்க்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com