பல்கலை.யில் நுண்ணுயிரியல் மாநாடு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் "நுண்ணுயிர் ஆராய்ச்சியில் அண்மைய போக்குகள், நுண்ணுயிரியல் பன்முகத் தன்மை ஆய்வு' என்ற தலைப்பிலான இரண்டு நாள் மாநாடு புதன்கிழமை தொடங்கியது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் "நுண்ணுயிர் ஆராய்ச்சியில் அண்மைய போக்குகள், நுண்ணுயிரியல் பன்முகத் தன்மை ஆய்வு' என்ற தலைப்பிலான இரண்டு நாள் மாநாடு புதன்கிழமை தொடங்கியது.
 மாநாட்டுச் செயலர் முனைவர் ஜோசப் செல்வின் வரவேற்றார். ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து, சத்தியபாமா அறிவியல்-தொழில்நுட்ப நிறுவனத் துணைத் தலைவர் வில்சன்அருனி, பேராசிரியர் பி.மாத்தூர் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
 புதுவை பல்கலை. துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை வகித்துப் பேசினார். நிகழ்வில் பங்கேற்ற புதுவை பல்கலை. பேராசிரியர் மாத்தூர், மனித நுண்ணுயிர் - உறுப்புகளுக்கு இடையிலான இரு இணையான வரைபடத்தை மேற்கோள் காட்டி விளக்கினார். மேலும், நுண்ணுயிரியைக் கொண்டு நோய்களைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார். பேராசிரியர் பூசி சித்தார்த்தா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com