பிரான்ஸ் கலைத் திருவிழா இன்று தொடக்கம்

புதுச்சேரியில் பிரான்ஸ் கலைத் திருவிழா வியாழக்கிழமை (மார்ச் 21) முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் பிரான்ஸ் கலைத் திருவிழா வியாழக்கிழமை (மார்ச் 21) முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இதுகுறித்து பிரான்ஸ் துணைத் தூதர் கேத்தரின் சுவார்டு புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
 பிரான்ஸ் தூதரகம், புதுவை அரசின் சுற்றுலாத் துறை, அல்லையன் பிரான்சிஸ் அமைப்பு, லிசி பிரான்சிஸ் பள்ளி ஆகியவை இணைந்து "பிரான்கோஃபோன்' என்ற கலைத் திருவிழாவை புதுச்சேரியில் முதல் முறையாக வியாழக்கிழமை (மார்ச் 21) முதல் 25-ஆம் தேதி வரை நடத்துகின்றன.
 இந்தியா, பிரான்ஸ், நேபால், அல்ஜீரியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி நடனம், இசை, சாகச நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் திருவிழாவில் நடைபெறும். திருவிழாவில் குழந்தைகள், இளம் கலைஞர்களுக்காக சிறப்பு பயிலரங்குகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் கலாசாரத்தின் ஜன்னலாக புதுவை இருப்பதால், இங்கு திருவிழாவை நடத்துகிறோம்.
 இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் சிக்ளேர் மார்ச் 23-ஆம் தேதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கலை நிகழ்ச்சிகள் புதுச்சேரி காந்தி திடலில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) மாலை 6.30 மணி அளவில் நடைபெறும். அலையன்ஸ் பிரான்சிஸ் அலுவலகத்தில் இரவு 7.30 மணிக்கு மேலும் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து, மார்ச் 23-ஆம் தேதி இரவு 7 மணி அளவிலும் அலையன்ஸ் பிரான்சிஸ் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
 இதேபோல, மார்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் திப்பிராயப்பேட்டையில் உள்ள பாண்டி மெரினா கடற்கரையில் ஆப்பிரிக்க, கேரள, புதுவை இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்து நிகழ்ச்சிகளையும் இலவசமாக காணலாம் என்றார் கேத்தரின் சுவார்டு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com