Enable Javscript for better performance
அதிமுக நிர்வாகிகளுடன் ரங்கசாமி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் அதிமுக நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் தலைவர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.
     புதுவை மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக ஆதரவுடன் போட்டியிடும் என்.ஆர்.காங். வேட்பாளர் கே.நாராயணசாமியை வெற்றி பெறச் செய்வதற்காக நெல்லித்தோப்பில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமை வகித்தார். இதில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, வேட்பாளர் நாராயணசாமி, பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி ராமதாஸ், முன்னாள் அமைச்சர் வெங்கடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai