Enable Javscript for better performance
கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி அருகே கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
     வேலூர் மாவட்டம், நாச்சியார்குப்பம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் பிரசன்னகுமார் (29). இவர், வில்லியனூர் அருகே பொறையூரில் தனியார் தோல் தொழில்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
     நிறுவனத்தில் ஒரு கட்டடத்தின் மாடியில் தனியே தங்கியிருந்து அங்கு பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி மாடியில் சமையல் செய்த போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
     தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரசன்னகுமார், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai