Enable Javscript for better performance
கல்வியில் அரவிந்தரின் சிந்தனைகள் பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை பல்கலைக்கழக கல்விப் புலம், அரபிந்தோ இந்திய கலாசார அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வியில் அரவிந்தரின் ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
     பயிலரங்கத்தை அரபிந்தோ இந்திய கலாசார அறகட்டளை இயக்குநர் சம்பத் ஆனந்த மிஸ்ரா தொடக்கிவைத்தார். புல முதன்மையர் மும்தாஸ் பேகம் வரவேற்றார்.
     அரபிந்தோ இந்திய கலாசார அறக்கட்டளைத் தலைவர் மொகந்தி முன்னிலை வகித்தார்.
     இதில், பல்கலைக்கழகத்தின் ஆய்வியல் துறை இயக்குநர் பாலகிருஷ்ணன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
     தொடர்ந்து அவர், விழாவில் பயிற்சிப்பட்டறை தொடர்பான சிறப்பு மலரையும் வெளியிட்டார். இதில் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     நிறைவில் பேராசிரியர் செல்லமணி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai